டிரெண்டிங்

மநீம இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - ஆயிரம் விளக்கு தொகுதியில் கே.எம்.சரிப் போட்டி

Sinekadhara

ஆயிரம் விளக்கு, ராயபுரம், திருவாரூர் உள்ளிட்ட 24 தொகுதிகளுக்கு மநீம வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் கே.எம்.சரிப்பும், ராயபுரம் தொகுதியில் குணசேகரனும், திரூவாரூர் தொகுதியில் கபில் அரசனும், தொண்டாமுத்தூர் தொகுதியில் ஷாஜகானும், உடுமலைப்பேட்டையில் ஸ்ரீநிதியும் போட்டியிடுகின்றனர். ஆயிரம் விளக்குத் தொகுதியில் திமுக சார்பில் மருத்துவர் எழிலனும், பாஜக சார்பில் குஷ்புவும் போட்டியிடுகின்றனர்.

மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியுடவுள்ளார்.