சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள், தன்னை புகழ்ந்து பேச வேண்டாம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும் கடந்த 6 மாதங்களில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஒகி புயலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கேள்வி நேரத்தின் போது கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ, பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என வாழ்த்தி பேசினார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், பேரவையில் உறுப்பினர்கள் பேசும் போது தன்னை வாழ்த்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அனைத்து பாராட்டிற்கும் ஜெயலலிதாவே காரணம் என்றும் கூறினார்.