டிரெண்டிங்

சசிகலாவுக்கு இரண்டு முதல்வர்களை உருவாக்கிய சிறப்பு உண்டு: கருணாஸ்

சசிகலாவுக்கு இரண்டு முதல்வர்களை உருவாக்கிய சிறப்பு உண்டு: கருணாஸ்

Rasus

இரண்டு முதலமைச்சர்களை உருவாக்கிய சிறப்பு சசிகலாவுக்கு உண்டு என நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருவாடனை தொகுதி எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸ், “ஜெயலலிதா தான் முக்குலத்தோர் புலிப்படைக்கான அரசியல் அங்கீகாரத்தை கொடுத்தார். அதற்கு உறுதுணையாக இருந்தவர் சசிகலா தான்” என்று கூறினார்.

மேலும், “ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இரண்டு முதலமைச்சர்களை தமிழகத்திற்கு அடையாளம் காட்டியவர் சசிகலா தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தற்போது ஏற்பட்டுள்ள அதிமுக உட்கட்சி பிரச்னை பற்றி கருத்துக் கூற விரும்பவில்லை” எனவும் கருணாஸ் தெரிவித்தார்.