டிரெண்டிங்

ஆதிவாசி மக்களுடன் எம்எல்ஏ ஆறுகுட்டி உற்சாக டான்ஸ்..!

Rasus

கோவை மாவட்டம் ஆனைகட்டி மலைகிராமங்களில் ஒன்றான தூமனூர் கிராமத்தில் ஆதிவாசி மக்களுடன் எம்.எல்.ஏ ஆறுகுட்டி நடனமாடினார். முதன் முறையாக மின்சாரம் கிடைத்த மகிழ்ச்சியில் ஆதிவாசி மக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

கோவை ஆனைகட்டி மலைகிராங்களில் ஒன்றான தூமனூர் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களைக் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் ஆடு, மாடு மேய்த்தல், விவசாயம் உள்ளிட்ட வேலைகளை செய்துவருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டியிடம் நீண்ட நாட்களாக தங்கள் கிராமத்திற்கு மின்சார வசதி செய்துதரக்கோரி ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் தற்போது தூமனூர் கிராமத்திற்கு மலை வழியாக சுமார் 40 லட்சம் செலவில் 80 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்சார வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தங்கள் கிராமத்திற்கு வந்ததை இக்கிராமமக்கள் திருவிழாவாக கொண்டாடினர். மின்சார பயன்பாட்டை துவக்கி வைக்க வந்த கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, மற்றும் வனத்துறையினர், அரசு அதிகாரிகள், மின்சார வாரிய அதிகாரிகள் ஆகியோரை ஆதிவாசி மக்கள் தங்கள் பாரம்பரிய நடனத்துடன் மேள, தாளம் முழங்க ஆடிப்பாடி வரவேற்றனர். விழாவில் எம்.எல்.ஏ ஆறுகுட்டியும் ஆதிவாசி மக்களுடன் பாரம்பரிய நடனம் ஆடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். இதில் உற்சாக மிகுதியில் வனத்துறை அதிகாரி ஒருவர் அவர்களுடன் சேர்ந்து நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.