டிரெண்டிங்

சந்திரசேகர ராவின் சமூகநீதி பேரணி வெற்றி பெற ஸ்டாலின் வாழ்த்து

சந்திரசேகர ராவின் சமூகநீதி பேரணி வெற்றி பெற ஸ்டாலின் வாழ்த்து

Rasus

சமூகநீதி கொள்கையை முன்னெடுக்கும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் பேரணி வெற்றிபெற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகநீதிக் கொள்கையின் சாம்பியனாக விளங்கும் திமுவின் தொடர் முயற்சியின் காரணமாக தமிழகத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசு பணிகளில் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி 27 சதவீத இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தியதில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங், கருணாநிதியின் பங்கை வரலாறு மறக்காது எனவும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் சிறுபான்மையின தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரித்துள்ள சந்திரசேகர ராவின் சமூக நீதிப் பயணம் பாராட்டத்தக்கது என குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், இடஒதுக்கீட்டை மாநிலங்களே முடிவு செய்துகொள்ளும் அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும்என்று டெல்லி ஜந்தர்மந்தரில் அவர் நடத்தவிருக்கும் பேரணியையும் வரவேற்றுள்ளார். தமிழகத்தின் உரிமைக்குரல் அண்டை மாநிலங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருப்பவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசு பணிகளிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள ஸ்டாலின் டெல்லி ஜந்தர்மந்தரில் சந்திரசேகர் ராவ் நடத்தவிருக்கும் பேரணிக்கு கருணாநிதி சார்பில் ஆதரவு தெரிவிப்பதோடு பேரணி வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.