திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மாலை அறிவிக்க உள்ளார்.
திமுக கூட்டணியில் தோழமை கட்சிகளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகளும், மதிமுக, ஐஜேகே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
தொகுதி உடன்பாடு முடிவடைந்திருந்தாலும், கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது தெரியாமல் இருந்து வந்தது. இநநிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மாலை அறிவிக்க உள்ளார்.