டிரெண்டிங்

சேகர் ரெட்டியின் டைரியில் உள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்: ஸ்டாலின்

சேகர் ரெட்டியின் டைரியில் உள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்: ஸ்டாலின்

webteam

சேகர் ரெட்டியுடன் புகாருக்கு உள்ளான அமைச்சர்கள் அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சேகர் ரெட்டியின் சர்ச்சைக்குரிய டைரியின் சில பக்கங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தப் பக்கங்களில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பண்ணன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசியலில் அடுத்த பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய அமைச்சர்கள் அத்தனை பேரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். இதற்குத் தமிழக ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வற்புறுத்தினார். ஓராண்டுக்கு முன்பே வருமான வரித்துறை வசம் சென்ற இந்த டைரி ரகசியம் இப்போதுதான் கசிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.