டிரெண்டிங்

மாநில சுயாட்சிக்கு புத்தாண்டு வழிவகுக்கும்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மாநில சுயாட்சிக்கு புத்தாண்டு வழிவகுக்கும்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

webteam

சமூக நீதி, மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை கோட்பாடுகளை போற்ற புத்தாண்டு வழிவக்கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

உலகம் முழுவதும் உள்ள மக்கள் 2018 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகின்றனர். பல நாடுகளிலும் வாண வேடிக்கையுடன், பொது இடங்களில் கூடி புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் புத்தாண்டை இனிப்பு வழங்கியும், கேக் வெட்டியும் வரவேற்க மக்கள் தயாராவுள்ளனர். புத்தாண்டை வரவேற்க கோவில்களிலும், ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். அன்பு, சகோதர மனப்பான்மை, சகிப்புத்தன்மையுடன் வாழ ஏற்ற சூழல் நிறைந்த ஆண்டாக அமையவும், தமிழகம் தன் அருமை பெருமைகளை மீண்டும் உறுதியுடன் நிலைநிறுத்திக் கொள்ளவும் புத்தாண்டு வழிவகுக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.