வாய்ப்பு வரும் போது அதிமுக ஆட்சி மீது பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை நாளை கூட உள்ள நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படவேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்களுக்கு ஆலேசானை வழங்கப்பட்டது.
எம்எல்ஏக்களுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அதன் முடிவை பொறுத்து அரசுக்கு எதிரான நடவடிக்கை இருக்கும் என கூறினார். மேலும் வாய்ப்பு வரும் போது அதிமுக ஆட்சி மீது பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.