டிரெண்டிங்

ஸ்டாலினுடன் சகஜமாக உரையாடிய சுப்ரமணியன் சுவாமி

ஸ்டாலினுடன் சகஜமாக உரையாடிய சுப்ரமணியன் சுவாமி

rajakannan

திமுக தலைவர் கருணாநிதியின் குடும்ப மருத்துவர் இல்லத் திருமண விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கலந்துகொண்டார். 

2ஜி அலைக்கற்றை வழக்கில் டிசம்பர் 24ஆம் தேதி தீர்ப்பு வெளியானது. குற்றம்சாட்டப்பட்ட கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தீர்ப்பு வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு சென்னை வந்திருந்த பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். இந்தச் சந்திப்பு பலருக்கு அதிர்ச்சையை ஏற்படுத்தியது. கருணாநிதி-மோடி சந்திப்பையும் 2 வழக்கையும் ஒப்பிட்டு அப்போது விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில், கருணாநிதியின் குடும்ப மருத்துவர் இல்லத் திருமண விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன்சுவாமி கலந்து கொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்தத் திருமண விழாவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றார். 

அப்போது மு.க.ஸ்டாலினும் சுப்ரமணியன் சுவாமியும் சஜகமாக பேசிக்கொண்டிருந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 2 ஜி விவகாரத்தில் வழக்கு தொடர்ந்தவர் சுப்ரமணியன்சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.