டிரெண்டிங்

முதல்வர் பழனிசாமியை இன்று நேரில் சந்திக்கிறார் ஸ்டாலின்

முதல்வர் பழனிசாமியை இன்று நேரில் சந்திக்கிறார் ஸ்டாலின்

Rasus

பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று சந்தித்து பேச இருக்கிறார்.

பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் போக்குவரத்துக் கழகத்தினை நஷ்டமில்லாமல் எவ்வாறு நடத்துவது..? என்பது குறித்து ஆய்வு செய்ய கடந்த மாதம் மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர் பாலு, தொமுச தலைவர் சண்முகம் உள்ளிட்ட 5 பேர் கொ‌ண்ட குழுவை மு.க.ஸ்டாலின் அமைத்திருந்தார். அந்தக் குழு கடந்த ஞாயிறு அன்று தனது அறிக்கையை ஸ்டாலினிடம் சமர்ப்பித்திருந்தது.

இந்த அறிக்கையை வழங்குவதற்காக ஸ்டாலின் இன்று முதலமைச்ச‌ர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகு, அவரை ஸ்டாலின் நேரில் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.