டிரெண்டிங்

அதிமுக பதாகையால் பொறியாளர் மரணம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

அதிமுக பதாகையால் பொறியாளர் மரணம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

webteam

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்கிற பெயரில் உயர்நீதிமன்ற உத்தரவினை ஆளுங்கட்சி அப்பட்டமாக மீறுவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக சாலையில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவில் வெளியே நீட்டியபடி இருந்த மூங்கில் இடித்து ரகு என்ற இளம் பொறியாளர், ‌மூங்கிலில் இடித்து தலையில் அடிபட்டு உயிரிழந்தார். வெளிநாட்டில் வசித்து வரும் ரகு திருமணத்திற்கு பெண் பார்க்க சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் மு.க.ஸ்டாலின், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்கிற பெயரில் உயர்நீதிமன்ற உத்தரவினை ஆளுங்கட்சி அப்பட்டமாக மீறுவதாக குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் ஆபத்தான மற்றும் இடையூறு ஏற்படுத்தக்கூடிய பதாகைகளை அதிமுக அரசு வைத்து வருவதாகவும் கூறியுள்ளார். இதனால் கோவையைச் சேர்ந்த ரகு என்ற இளம் பொறியாளர் மரணமடைந்திருக்கிறார் என்று கூறியுள்ள ஸ்டாலின், சட்டத்தை மீறி செயல்படும் இந்த அரசை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.