சென்னையில் தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு போதிய அளவில் சிகிச்சை அளிக்கவில்லை என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொடுங்கையூரில் புதிதாக திறக்கப்பட்ட பேக்கரியில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, யாரும் எதிர்ப்பாராத வகையில் பேக்கரிக்குள் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்தது. அதில், மீட்புப்பணியில் இருந்த 8 பேர் மட்டுமின்றி, கடை முன் குவிந்தவர்கள் பலரும் தீக்காயம் அடைந்தனர். இவர்கள் கீழ்ப்பாக்கம் மற்றும் ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தீவிபத்தில் காயமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு போதிய அளவில் சிகிச்சை அளிக்கவில்லை என குற்றஞ்சாட்டினார். இச்சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் குரல் எழுப்ப உள்ளதாகவும் கூறினார்.