மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் மாணவர்களுக்கு தமிழக அரசு மன்னிக்க முடியாது துரோகம் செய்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக அரசின், அரசாணை ரத்து செய்யப்பட்டுவிட்டதால் மருத்துவ கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், தொழில் தொடங்க உகந்த மாநிலங்களில், தமிழ்நாடு கடைசி இடத்தில் இருப்பதாக மாநில தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஆனால் அதற்கு எந்த பதிலும் இல்லை என்றார்.
முன்னதாக, எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்படும் என்று தமிழக அரசு ஆணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.