டிரெண்டிங்

தமிழக அரசு பாஜகவின் காலில் விழுந்து கிடக்கிறது: மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு பாஜகவின் காலில் விழுந்து கிடக்கிறது: மு.க.ஸ்டாலின்

webteam

சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நிகழ்வு, மத்திய பாஜக அரசின் காலில் தமிழக அரசு விழுந்து கிடப்பதை உணர்த்துவதாக இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மாட்டிறைச்சி விவகாரத்தில் முதலமைச்சரின் பதிலில் திருப்தி இல்லை எனக்கூறி சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளிநடப்பு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாட்டிறைச்சி தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக பேரவையில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினோம். அண்டை மாநிலமான புதுச்சேரியில் மாட்டிறைச்சி தொடர்பான மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரளா, மேகலாயா, பாஜக கூட்டணி ஆளும் கோவா மாநிலத்திலும் கூட மாட்டிறைச்சி தொடர்பான மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்படியிருக்க அதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவையிலும் தனித்தீர்மானம் கொண்டுவர வேண்டி வலியுறுத்தினோம். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், ஏதோ ஒரு அறிக்கையை மட்டும் படித்து விட்டு உட்கார்ந்துவிட்டார். மத்திய பாஜக அரசு எது கொண்டுவந்தாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ள கூடிய நிலையில் தமிழக அரசு இருக்கிறது. மத்திய அரசு, நெருக்கடி நிலை கொண்டுவந்தபோது ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்று அப்போது திமுக எதிர்த்தது. ஆனால் தமிழக அரசு இப்போது பாஜகவின் காலில் விழுந்து கிடக்கிறது" என்றார்.