டிரெண்டிங்

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியுடன் மு.க.அழகிரி சந்திப்பு

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியுடன் மு.க.அழகிரி சந்திப்பு

Rasus

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது மகன் மு.க.அழகிரி சந்தித்தார்.

கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் பேரன் மனு ரஞ்சித்திற்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்ஷதாவிற்கும் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டில் தமிழ் முறைப்படி திருணம் நடைபெற்றது. கருணாநிதி தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். திருமணத்தில் மு.க. அழகிரி, ஸ்டாலினின் மனைவி துர்கா, கனிமொழி, திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை மு.க.அழகரி சந்தித்தார். அப்போது, தயாநிதி அழகிரியும் உடன் இருந்தார். வெகு நாட்களாக கருணாநிதி குடும்பத்துக்குள் மனக்குழப்பம் இருந்து வரும் நிலையில், இன்று அழகிரி கருணாநிதியைச் சந்தித்து இருக்கிறார். இதனிடையே, முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்குச் சென்றதால் ஸ்டாலின் இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.