டிரெண்டிங்

பொன்.ராதாகிருஷ்ணன் கேள்விக்கு ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன் பதில்..

பொன்.ராதாகிருஷ்ணன் கேள்விக்கு ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன் பதில்..

webteam

மக்கள் ஏற்றுக்கொள்ளாத திட்டங்களுக்கு தமிழக அரசு துணை நிற்காது என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை மாநில அரசு அமைச்சர்கள் சாக்குபோக்கு கூறி தடுப்பதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தில் சரக்கு பெட்டக மாற்று முனைய வர்த்தக துறைமுகம் அமைவதன் அவசியம் மற்றும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்த சந்திப்பின் போது இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதற்கு பதிலளிக்கும் வகையில் மயிலாடுதுறையில் பேசியுள்ள அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு ஏற்படும் அச்ச உணர்வுகளைப் போக்காமல் அடுத்தவர்களை குறைசொல்வது தேவையற்றது என தெரிவித்துள்ளார். மேலும் மக்களிடம் திட்டம் பற்றி புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று சென்னை பட்டினம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மக்கள் ஏற்றுக்கொள்ளாத திட்டங்களுக்கு தமிழக அரசு துணை நிற்காது என தெரிவித்துள்ளார். மேலும் திட்டம் பற்றி மக்களிடம் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.