அமைச்சர்கள் ஏதோ பயத்தில் இருக்கிறார்கள்; அதனால்தான் என்னை விலகச் சொன்னார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளர்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் வி.கே.சசிகலாவை சந்திக்க சென்றுள்ள டிடிவி தினகரன், “அமைச்சர்கள் ஏதோ பயத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் என்னை விலகி இருக்கச் சொன்னார்கள். கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற தொண்டர்கள் என்னை அழைக்கிறார்கள். அதிமுகவின் ஒற்றுமையைப் பாதுகாக்க கண்டிப்பாக உழைப்பேன். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக்கு என்னால் எந்த பாதிப்பும் வராது. கட்சியின் பொதுச்செயலாளர் அறிவுரையை ஏற்று செயல்படுவேன். அதற்காகவே இங்கு வந்துள்ளேன்” என்று கூறினார்.
சிறையிலிருந்து வெளியே வந்த தினகரன், கட்சிப்பணியை தொடர்வேன் என்றும், தன்னை கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்றும் தெரிவித்தார்.