டிரெண்டிங்

நிலவேம்பு கசாயம் குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை: விஜயபாஸ்கர் எச்சரிக்கை

நிலவேம்பு கசாயம் குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை: விஜயபாஸ்கர் எச்சரிக்கை

Rasus

நிலவேம்பு கசாயம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெங்கு காய்ச்சல் சிகிச்சை தொடர்பாக திருச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நிலவேம்பு கசாயத்தால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது என்று கூறினார்.

டெங்குவை கண்டறியும் கருவிகளை கூடுதலாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் 15 நாட்களில் டெங்கு இல்லாத நிலை உருவாக்கப்படும் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தனியார் மருத்துவமனைகள் உரிய ஆய்வு மேற்கொள்ளாமல் டெங்கு காய்ச்சல் எனக்கூறி பணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.