தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசலில் இருக்கும் அவரது குவாரி மற்றும் 100 ஏக்கர் நிலத்தை முடக்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பொதுப்பணித்துறையினர் ஆளில்லா விமானம் மூலம் நடத்திய ஆய்வில் குவாரியில் அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகவும் அதன் மூலம் கிடைத்த வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது. வழக்கு முடியும் வரை 100 ஏக்கர் நிலம் மற்றும் குவாரியை முடக்கப்படுவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.