டிரெண்டிங்

ஆஸி. டூர் முடிந்து திரும்பினார் அமைச்சர் எஸ்பி.வேலுமணி

ஆஸி. டூர் முடிந்து திரும்பினார் அமைச்சர் எஸ்பி.வேலுமணி

webteam

குடிநீர், கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டங்களை தமிழ‌கத்தில் செயல்படுத்த ஆஸ்திரேலியா குறைந்த வட்டியில் நிதியளிக்க தயாராக இருப்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்தார். 

ஐந்து நாட்கள் பயணமாக ஆஸ்திரேலியா சென்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இன்று காலை கோவை செல்ல விமான நிலையம் வந்தார். அப்போது பேசிய அவர், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில நிதி அமைச்சரைச் சந்தித்து ஆஸ்திரேலிய பங்களிப்புடன் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்ததாகக் கூறினார். 

மேலும், மெல்பர்ன் நகரில் கிட்டத்தட்ட 13ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் செயல்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு ஆலோசனை நடத்தியதாகவும் அமைச்சர் கூறினார்.