டிடிவி தினகரன் நடிகர் வடிவேலு போல் பேசிவருவதாக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி வீரமணி விமர்சித்துள்ளார்.
வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து அவரை டிடிவி தினகரன் நீக்கியிருந்த நிலையில், இவ்வாறு கே.சி.வீரமணி கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துக்கொள்வதற்காக வேலூர் சென்ற அவர், ஆம்பூரில் அதிமுகவினர் மத்தியில் பேசினார். அப்போது, டிடிவி தினகரன், நடிகர் வடிவேலுவை போல், சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வதாக பேசினார்.