அமைச்சர் செங்கோட்டையன் சகோதரர் மகன் செல்வம் திமுகவில் இணைந்தார்
அமைச்சர் செங்கோட்டையனின் சகோதரர் மகன் செல்வம், முகஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்துள்ளோம்.எங்களை கட்சியில் இணைத்தற்கு நன்றி.
கட்சி தொண்டர்களை அதிமுக சரியாக கையாளவில்லை.கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக அதிக தொண்டர்கள் இணைய முடியவில்லை ஆனால் கூடிய விரைவில் பலர் கட்சியில் இணைய உள்ளனர்.
தனிபட்ட கருத்து வேறுபாடு எதுமில்லை.எங்களை நம்பியுள்ள தொண்டர்களுக்கு நன்மைகளை செய்ய திமுகவில் இணைந்துள்ளோம். அதிமுகவில் அடிமட்ட தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்