டிரெண்டிங்

அமைச்சர் செல்லூர் ராஜின் செல்போன் திருட்டு

அமைச்சர் செல்லூர் ராஜின் செல்போன் திருட்டு

rajakannan

திருவண்ணாமலை அருகே அமைச்சர் செல்லூர் ராஜூவின் செல்போன் திருடுபோயுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஜமுனாமரத்தூரில், மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் புதியதாகக் கூட்டுறவு வங்கிக் கிளை இன்று(19.02.18) திறக்கப்பட்டது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மற்றும் கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், செய்யாறு எம்.எல்.ஏ தூசி மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை அமைச்சர் செல்லூர் ராஜு திறந்துவைத்தார். 

விழா முடிந்ததும் விருந்தினர் மாளிகைக்கு சென்றிருந்த போது அங்கிருந்து அவருடைய செல்போன் திருடு போனது.
 இது குறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி விசாரணை நடத்தி வருகிறார். முக்கிய எண்கள் அடங்கிய செல்போன் திருடு போனதால் அமைச்சர் அதிர்ச்சியடைந்துள்ளார்.