உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை சந்திக்க, சசிகலா பரோலில் வந்துள்ள நிலையில் அதிமுக ஆட்சி சிறப்பாக அமைய பாடுபட்டவர் சசிகலா என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " என்னை பொறுத்தவரை ஜெயலலிதா அரசை அமைப்பதற்காக சசிகலா மிகச் சிறப்பான முறையில் பாடுபட்டார். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அந்த கருத்தை நான் மாற்றிக் கொள்பவனும் இல்லை. அமைச்சராக இருப்பதால் விருப்பு வெறுப்புகளை அடக்கிக் கொள்கிறேன். முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் எடுக்கும் நடவடிக்கைக்கு என்னுடைய கருத்து பாதகமாக இருக்க கூடாது. வேகமாக பரவி வரும் டெங்குவை கட்டுப்படுத்த சுனாமி வேகத்தில் அரசு பணியாற்றி வருகிறது. டெங்குவை விட மோசமானது திமுக" என்றார்.