டிரெண்டிங்

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் என்ன தவறு - ராஜேந்திர பாலாஜி கேள்வி

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் என்ன தவறு - ராஜேந்திர பாலாஜி கேள்வி

webteam

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைப்பதில் என்ன தவறு என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னையில் 10 ரூபாய் ஆவின்பால் பாக்கெட்டை அறிமுகப்படுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி வந்தால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது அறுதி பெரும்பான்மையை நிரூபிப்பார்‌ என கூறினார். தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைப்பதில் என்ன தவறு என்றும், பாஜகவுடன் அதிமுக ஏற்கனவே கூட்டணி வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.