சித்தாந்த ரீரியில் வரலாற்று திரிப்பு நடந்தால் தமிழக அரசு எதிர்க்கும் என தமிழ்வளர்ச்சி, பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கீழடி ஆய்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கீழடியில் கண்டுபிடிக்கப்படும் பொருட்களின் தொன்மையை கண்டுபிடித்து நிலைநாட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு செய்யும்.அத்துடன் சித்தாந்த ரீதியிலான வரலாற்று திரிப்பை ஒருபோதும் அரசு அனுமதிக்காது.ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. அதனை தமிழக அரசு விரைவுபடுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதற்கான விசாரணை ஆணையத்திற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும் கூறினார். தற்போதுள்ள அதிமுகவில் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் என இருதரப்பு இல்லை.ஒற்றுமையுடன் ஒரே தரப்பாக செயல்படுவாதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.