டிரெண்டிங்

ஹெச்.ராஜா அதிமுகவினரை உரசி பார்க்கக்கூடாது : அமைச்சர் ஜெயக்குமார்

ஹெச்.ராஜா அதிமுகவினரை உரசி பார்க்கக்கூடாது : அமைச்சர் ஜெயக்குமார்

webteam

பாஜகவின் ஹெச்.ராஜா அதிமுகவினரை உரசிப் பார்க்கக்கூடாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுகவினரை பாஜகவின் ஹெச்.ராஜா உரசி பார்க்கக்கூடாது. ஹெச்.ராஜா சொன்ன சொற்கள் அவருக்குதான் பொருந்தும். நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு கூனிக்குறுகி நின்றவர் அவர். அட்மின்தான் ட்விட்டரில் பதிவு போட்டார் என்று சொன்னவர் ஹெ.ராஜா.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டின் முன்பு முந்தைய காலத்தில் காத்துக்கிடந்தது யார் என எல்லோருக்கும் தெரியும். கொரோனாவின் தாக்கம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். அதை தமிழகத்தோடு ஒப்பிடக்கூடாது. கொரோனா பரவும் சூழல் உள்ளதாலேயே விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி வழங்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.