டிரெண்டிங்

தேர்தலை எதிர்கொள்ள திமுகவிற்கு அச்சம்: ஜெயக்குமார்

தேர்தலை எதிர்கொள்ள திமுகவிற்கு அச்சம்: ஜெயக்குமார்

webteam

தேர்தலை சந்திக்க திமுகவிற்கு திராணி இல்லை என்றும், அதனால் போலி வாக்காளர்கள் விவாகரத்தை திமுக கூறுவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

ஆர்.கே.நகர் வாக்களர் எண்ணிக்கை குறித்து அண்மையில் கருத்து தெரிவித்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆர்.கே.நகரில் 40 ஆயிரம் போலி வாக்காளர்களை அதிமுகவினர் சேர்த்துள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியானதும் நீதிமன்றத்துக்கு சென்று தடைபெற்றது திமுகதான். தற்போது ஆர்.கே.நகர் தேர்தலிலும் நிற்பதற்கு திமுகவிற்கு பயம். எனவே போலி வாக்காளர்கள் என்ற விவகாரத்தை திமுகவினர் கையில் எடுத்துள்ளனர். இதன்மூலம் தேர்தலை சந்திப்பதற்கு திமுகவினருக்கு திராணி இல்லை என்பது தெரிகிறது” என்று கூறினார்.