டிரெண்டிங்

பிரஷர் குக்கர் இரும்புக் கடைக்குதான் போகும்: ஜெயக்குமார் கமென்ட்

பிரஷர் குக்கர் இரும்புக் கடைக்குதான் போகும்: ஜெயக்குமார் கமென்ட்

webteam

டிடிவி தினகரனின் பிரஷர் குக்கர் இறுதியாக இரும்புக் கடைக்குதான் போகும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேஷும் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகிறார். இவர்களுடன் சுயேட்சையாக டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். டிடிவி தினகரன் கோரியிருந்த தொப்பி சின்னம் ரமேஷ் என்ற வேட்பாளருக்கு வழங்கப்பட்டது. பின்னர் இறுதியாக அவருக்கு பிரஷர் குக்கர் சின்னம் வழங்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் பிரச்சாரம் ஆர்.கே நகரில் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் சென்னை தண்டையார்பேட்டையில் பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “அடிப்படையிலேயே நாங்கள் அனைவரும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் தொண்டர்கள். எனவே அதிமுக தொண்டர்களாகிய எங்களுக்கு மிகப்பெரும் வெற்றியை பெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அந்த எண்ணத்தை நாங்கள் வெளிப்படுத்தினால் அது மற்றவர்களுக்கு அழுத்தும் கொடுப்பது என்று கிடையாது. பிரஷர் குக்கர் அதிமுகவிற்கு அழுத்தம் கொடுக்காது. பிரஷர் குக்கர் இறுதியில் இரும்புக்கடைக்குதான் போகும்” என்று கூறினார்.