அதிமுகவை குறி வைத்து குறை கூறுவதில் கமல்ஹாசனுக்கு உள்நோக்கம் இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்து பேருந்துகளை முழுமையாக இயக்க செய்வதே சிறந்த பொங்கல் பரிசு என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் "சமூக நலத்திட்டங்களை கைவிடக் கூறுகிறாரா கமல்ஹாசன்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் கமல்ஹாசன் அதிமுகவை குறி வைத்து குறை கூறுவதில் உள்நோக்கம் இருப்பதாக விமர்சித்தார். கமல்ஹாசன் பொதுவாக அதிமுகவை குறி வைத்து குற்றம் சாட்டுவதாகவும் கூறினார். மேலும், பொதுமக்களுக்கு கைக்கொடுக்கும் வகையில் அவர்களுக்கு செய்யப்படும் சமூக நலத்திட்டங்களை கமல்ஹாசன் கைவிட சொல்கிறாரா? என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.