உப்பநீர் சர்க்கரை ஆனாலும் ஆகாலம், ஆனால் ஸ்டாலின் கூறுவது என்றுமே நடக்காது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
உதகையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டால் மத்திய அரசு சிக்கி விடுமோ என்ற அச்சத்தால்தான் பொறுப்பு ஆளுநர் மாற்றப்பட்டு, புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் தமிழகத்தில் பாஜகவின் அடிமை ஆட்சியை தூக்கி எறியவும், கலைக்கவும் தயங்க மாட்டோம் என்றார். இன்னும் இரண்டு நாட்களில் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி வரும் என்றும், காத்திருங்கள் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “2 நாட்கள் அல்ல 200 வருடங்கள் சென்றாலும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி தான் நீடிக்கும். ஸ்டாலின் என்ன சித்து வேலைகள் செய்தாலும் அவர் நினைப்பது நடக்காது. ஸ்டாலின் நினைப்பதுபோல் எந்த மாற்றுமும் வாரது. எப்படியென்றால் சிவாஜி பாடலில் கூறியதுபோல் “உப்புக் கடல்நீரும் சர்க்கரை ஆகலாம், 30 நாட்களில் நிலவைக் காணலாம், சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம். ஆனால் ஸ்டாலின் கூறுவது என்றுமே நடக்காது” என்றார்.