டிரெண்டிங்

கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலைய பணிகள் என்னவாயிற்று?: பேரவையில் அமைச்சர் விளக்கம்

கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலைய பணிகள் என்னவாயிற்று?: பேரவையில் அமைச்சர் விளக்கம்

webteam

சென்னை வண்டலூரிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட கிளாம்பாக்க பேருந்து நிலையத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக வீட்டுவசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கையில் மீதான விவாதத்தின் போது தி.மு.க. உறுப்பினர் பி.ஜி.ராஜேந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது, கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் விளக்கமளித்தார். இதே போல், மாதவரத்தில் துணை புறநகர் பேருந்து முனையம் கட்டுமானப்பணிகள் முடிக்கப்பட்டு ஏப்ரல் 2018 முதலைமச்சர் திறந்துவைப்பார் என்றும் கூறியுள்ளார்.