டிரெண்டிங்

அமைச்சர் சி.வி.சண்முகம் நீக்கம்: தினகரன் அறிவிப்பு

அமைச்சர் சி.வி.சண்முகம் நீக்கம்: தினகரன் அறிவிப்பு

Rasus

விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் நீக்கியுள்ளார்.

அப்பதவிக்கு அம்மா பேரவையின் முன்னாள் செயலாளரான பாலசுந்தரம் என்பவரை நியமிப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகவும் டிடிவி தினகரன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்துள்ள நிலையில் அவர்களுக்கு ஆதரவாக உள்ள பலரை, கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கி டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். மேலும் அப்பொறுப்புகளில் தனக்கு ஆதரவாக உள்ளவர்களை டிடிவி தினகரன் நியமனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.