டிரெண்டிங்

பெண்கள் பிரச்னையில் பதவியை இழந்தவர் வைகைச்செல்வன்: அதிமுகவுக்குள் குடுமிபிடி!

webteam

தனியார் பால் கலப்படப் பிரச்னை குறித்து செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதால் அமைச்சர் பதவியை இழந்தவர் வைகைச்செல்வன் என்று கூறினார்.

உங்களுக்கு பாலைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று உங்கள் கட்சியின் முன்னாள் அமைச்சரே கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “வைகைச்செல்வன் சீக்கு வந்த ஒரு பிராய்லர் கோழி; அழுகிப்போன தக்காளி. அதை வைத்து குழம்பு வைத்து சாப்பிட முடியாது. எனவே அவரைப் பற்றி பேசுவது வேஸ்ட். பாலில் கலப்படம் இருக்கிறது என்ற எனது கருத்து தவறு என்று பேசுகிறார். என்னை ராஜினாமா செய்ய சொல்கிறார். அவர் ஒரு பால் முகவர் போல் பேசுகிறார்; தனியார் கம்பெனிகளுக்கு விலை போய்விட்டார். என்னை சினிமா வால்போஸ்டர் ஒட்டியவர் என்று சொல்கிறார். நான் சினிமா போஸ்டர் ஒட்டியவன் இல்லை; விருதுநகர் மாவட்டம் முழுவதும் அதிமுக சுவரொட்டிகளை ஒட்டியவன். அப்படியே சினிமா போஸ்டர் ஒட்டியிருந்தாலும் அதென்ன சட்டவிரோதத் தொழிலா? சினிமா போஸ்டர் ஒட்டியவர் உயரக் கூடாதா? அவர் திராவிட இயக்கத்தைப் பற்றிப் பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லாதவர். பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதால் அமைச்சர் பதவியை இழந்தவர் வைகைச்செல்வன்” என்றார்.