டிரெண்டிங்

திருவாரூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: கருணாநிதிக்கு அழைப்பு

திருவாரூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: கருணாநிதிக்கு அழைப்பு

Rasus

திருவாரூரில் தமிழக அரசு சார்பில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க திமுக தலைவர் கருணாநிதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசு சார்பில் மாவட்டந்தோறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கான கொண்டாட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி மதுரையில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் வரும் 19-ஆம் தேதி தமிழக அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க திருவாரூர் தொகுதி எம்எல்ஏ-வும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர திருத்துறைப்பூண்டி திமுக எம்எல்ஏ ஆடலரசு, மன்னார்குடி திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி ராஜா ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, மக்களவை துணை தலைவர் தம்பிதுரை, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.