டிரெண்டிங்

காஷ்மீர்: வீட்டுக்காவலில் இருந்து மெகபூபா முப்தி விடுவிப்பு!

sharpana

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதையொட்டி 14 மாதங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட மெகபூபா முப்தி விடுதலை செய்யப்பட்டார்!

 கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்டத்தையடுத்து காஷ்மீரின் முக்கியத் தலைவர்களான ஃபருக் அப்துல்லாவும், அவரது மகன் உமர் அப்துல்லாவும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தியும் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

இதில், ஃபருக் அப்துல்லா எம்.பியாக இருப்பதால் திமுக,காங்கிரஸ்,மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் ’இங்கு கேள்வி கேட்கவேண்டிய எங்கள் நண்பர் எங்கே?’ என்று குரல் கொடுத்தனர்.

அதன்பிறகு, அவர் ஏழு மாத வீட்டுக்காவலுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். தற்போது, 14 மாத வீட்டுக்காவலுக்குப் பிறகு மெகபூபா முப்தியை விடுதலை செய்வதாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாக செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் அறிவித்துள்ளார்.