டிரெண்டிங்

சச்சின் பைலட், அசோக் கெலாட் நாளை சந்திப்பு: உற்சாகத்தில் காங்கிரஸ்

சச்சின் பைலட், அசோக் கெலாட் நாளை சந்திப்பு: உற்சாகத்தில் காங்கிரஸ்

sharpana

ராஜஸ்தானில் துணை முதல்வராக இருந்த  சச்சின் பைலட்  கடந்த மாதம் காங்கிரஸ் கட்சித்தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 15 க்குமேற்பட்டவர்களை ஹரியானாவிலுள்ள தனியார் விடுதியில் தங்கவைத்திருந்தார். தமிழகத்தில் நடந்த கூவத்தூர்  காட்சிகளை நினைவுபடுத்துவபோல் அது அமைந்தது. சச்சின் பைலட் பா.ஜ.கவுக்கு தாவப்போகிறார். பா.ஜ.க குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது போன்ற குற்றச்சாட்டுகள் எதிரொலித்தன.  

கடந்த, ஒருமாத காலமாக தொடர்ந்த இப்பிரச்சனையை ராகுல்காந்தி தீர்த்துவைத்துள்ளார். நேற்று ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை சந்தித்து மனம் திறந்து பேசினார் சச்சின் பைலட். இதன்மூலம் இப்பிரச்சனை,  முடிவுக்கு வந்ததால் ராஜஸ்தான் சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு ஒருநாள் முன்னதாக சச்சின் பைலட் நாளை காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். பிரச்சனையில் இருந்த சச்சின் பைலட்டும் அஷொக் கெலாட்டும் நேருக்கு நேர் சந்திக்கவிருக்கிறார்கள். இதனால்,  நாளைய நிகழ்வை நாடே எதிர்பார்க்கும்.