டிரெண்டிங்

உடனடியாக அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள் !

உடனடியாக அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள் !

webteam

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும். அதன்படி இந்தியாவில் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளிலும் Model code of conduct எனப் படும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும். இதைப் பின்பற்றாமல் மீறனால் அது குற்றமாகும். 

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் காலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்ய வேண்டாதவை குறித்து அறிவுறித்தியுள்ளது. இது அரசியல்வாதிகளின் பேச்சுகள், கட்சிகளின் வாக்குறுதிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் அன்று செய்யக்கூடாதவை போன்ற பல்வேறு அறிவுறுத்தல்களைத் தருகின்றன.

தேர்தல் நடத்தை விதிமீறல்கள்: 

  •    வாக்கிற்கு பணம் கொடுப்பது.
  •   பரிசுப் பொருட்கள் மற்றும் சலுகை கூப்பன்கள் தருவது.
  •   வாக்காளர்களுக்கு மது வழங்குவது
  •    அனுமதியின்றி போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைப்பது
  •   ஆயுதங்களை காட்டி மிரட்டுவது
  •    அனுமதியின்றி அதிக வாகனங்களில் வருவது
  •    பொதுசொத்துக்களை சேதப்படுத்துவது
  •    ஊடக செய்திகளுக்கு பணம்
  •   வாக்காளர்களை வாக்குசாவடிகளுக்கு வாகனத்தில் அலைத்து செல்லுதல்
  •   பிரச்சாரம் தடைக்காலத்தில் பிரச்சாரம் செய்வது.
  •   மத சம்பந்தமான பேச்சுக்கள்
  •   அனுமதிக்கப்பட்ட நேரத்திற்மேல் ஸ்பீக்கர்கள் பயன்படுத்துதல்
  •  பொதுக்கூடத்திற்கு மக்களை வாகனத்தில் அழைத்து செல்லுதல்
  •   மத்திய மற்றும் மாநிலங்களில் ஆட்சியிலிருக்கும் அரசுகள் அரசு வாகனங்கள் மற்றும் அரசு சொத்துகள் தேர்தலுக்காக பயன்படுத்தக்கூடாது.
  •  மத்திய மற்றும் மாநில அரசுகள் தேர்தலில் பயன்பெறும் வகையிலுள்ள எந்தவித திட்டங்களையும் அறிவிக்க கூடாது.
  •  மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் தங்களின் அரசு முறை வருகைகளை தேர்தல் பரப்புரை மற்றும் தேர்தல் சார்ந்த செயல்களுக்கு     பயன்படுத்தக்கூடாது.
  •   மத்திய மற்றும் மாநில அரசுகள் அரசின் நிதிகளை தேர்தல் விளம்பரங்களுக்கு பயன்படுத்தக் கூடாது.

ஆகியவை தேர்தல் நடத்தை விதிமீறல்கள் ஆகும். 

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதால் பாஜகாவின் அமித் ஷா மற்றும் சமாஜ்வாதி கட்சியின் அசாம் கான் ஆகியோர் பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்தது. அதன்பிறகு அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் மன்னிப்பு கேட்டதையடுத்து அவர்கள் மீதான தடையை தேர்தல் ஆணையம் விலக்கியது குறிப்பிடத்தக்கது.