டிரெண்டிங்

கஞ்சா விற்பனை செய்த கணவன் - மனைவி : கையும், களவுமாக பிடித்த போலீஸ்

கஞ்சா விற்பனை செய்த கணவன் - மனைவி : கையும், களவுமாக பிடித்த போலீஸ்

webteam

ஒட்டன்சத்திரம் அருகே கஞ்சா விற்பனை செய்த கணவன் - மனைவியை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதி காந்தி நகரைச் சேர்ந்த தம்பதியினர் சௌந்தரபாண்டியன் - கல்யாணி. இவர்கள் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள நாகனம்பட்டி சாலையில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சத்தமின்றி அப்பகுதியில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நாகனம்பட்டி செல்லும் சாலையில் ஒரு கடையின் அருகே கையில் கட்டை பையுடன் கணவன்-மனைவி இருவரும் நின்றுகொண்டிருந்தனர். உடனே அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்த பையை பறிமுதல் செய்தனர். அதில் இரண்டரை கிலோ கஞ்சா இருந்ததும், அதனை அவர்கள் விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை கைப்பற்றிய போலீஸார், கணவன் மனைவி இருவரையும் கைது செய்தனர்.