டிரெண்டிங்

மத்திய அரசு கடமை தவறியதால் ஓகி புயலில் ஏராளமானோர் பலி: வைகோ குற்றச்சாட்டு

மத்திய அரசு கடமை தவறியதால் ஓகி புயலில் ஏராளமானோர் பலி: வைகோ குற்றச்சாட்டு

webteam

மத்திய அரசு தனது கடமையை செய்யத் தவறியதாலேயே ஓகி புயலில் சிக்கி ஏராளமான மீனவர்கள் உயிரிழக்க நேர்ந்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய அரசு தமிழகத்தை பொறுத்தவரையில், ஓகி புயலின் போது தனது கடமையை செய்ய தவறியது. அதனாலேயே பெரும்பாலான மீனவர்கள் உயிரிழக்க நேரிட்டது. அதேபோல் காணாமல் போன மீனவர்கள் குறித்து சரியான எண்ணிக்கையும் மத்திய அரசால் தரமுடியவில்லை” என்றார். மேலும், 60 நாட்களுக்கு பிறகும் கரை திரும்பாத மீனவர்களை இறந்தவர்களாக கருதி, அவர்களது குடும்பத்திற்கு 20 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தினார்.

ஓகி புயலில் பாதிப்படைந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் பகுதிகளை பார்வையிட கன்னியாகுமரி வந்துள்ள மத்தியக்குழு, இன்று இரண்டாவது நாளாக ஆய்வை மேற்கொண்டு வருகிறது. முழுமையான ஆய்விக்கு பின் தெளிவான அறிக்கை வெளியிடப்படும் என்றும் மத்திய குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.