திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வயலில் டிராக்டர் ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கோவந்தபுரம், கோபுரப்பட்டி, அழகியமணவாளம், அழிஞ்சிகரை, திருவரங்கப்பட்டி, பழையூர், உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கதிரவன் சுட்டெரிக்கும் வெயிலில் வீடு வீடாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். அப்போது வேட்பாளர் கதிரவனுக்கு அப்பகுதியில் உள்ள பெண்கள் ஆரத்தி எடுத்தும், இளைஞர்கள் மலர் மாலை அணிவித்தும் வரவேற்றனர்.
அழகியமணவாளம் கிராமத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற கதிரவன் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தை டிராக்டரில் உழுதார். பின்னர் கதிரவன் அங்கு பேசும்போது...
இப்பகுதியில் உள்ள பல்வேறு ஏரிகள் தூர் வாரமல் உள்ளன, இதனால் ஏரிகளில் போதிய நீர் நிரம்பாததால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள ஏரிகளை தூர்வாரி நிலத்தடி நீர் மட்டம் உயரவும், குடிநீர் பிரச்னைகளை தீர்க்கவும், விவசாயம் செய்யும் வகையில் ஏரிகளை தூர்வாரி அனைத்து ஏரிகளிலும் நீர் நீரப்ப நடவடிக்கைகள் எடுப்பேன் என பேசினார்.
இந்த பிரச்சாரத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.