டிரெண்டிங்

காங்கிரசுக்கு எதிரான தீய பரப்புரை முடிவுக்கு வந்தது: மன்மோகன் சிங்

காங்கிரசுக்கு எதிரான தீய பரப்புரை முடிவுக்கு வந்தது: மன்மோகன் சிங்

webteam

இன்று வெளியாகியுள்ள 2ஜி வழக்கின் தீர்ப்பால் ஐக்கிய முற்போக்கு அரசுக்கு எதிரான தீய பரப்புரை முடிவுக்கு வந்திருக்கிறது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த 2ஜி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியது. நாடு முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ. ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் விடுதலை செய்து, நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தரப்பு தவறி விட்டதாகவும் நீதிபதி தெரிவிந்திருந்தார்.

இந்நிலையில், வழக்குக் குறித்து செய்தியாளர்களுக்கு பதில் அளித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 2ஜி வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை தான் மதிப்பதாக தெரிவித்தார். மேலும், இன்று வெளியாகியுள்ள தீர்ப்பால் காங்கிரசுக்கு எதிராக நடத்தி வந்த தீய பரப்புரை முடிவுக்கு வந்திருக்கிறது என்றும் அவர் கூறினார். அதே போல் 2ஜி வழக்கில் வெளியாகியுள்ள தீர்ப்பை வரவேற்பதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.