டிரெண்டிங்

பெண்கள் உள்ளாடைதான் குறி.. ம.பியில் வீடு வீடாகச் சென்று உள்ளாடைகளை திருடும் மர்ம நபர்!

பெண்கள் உள்ளாடைதான் குறி.. ம.பியில் வீடு வீடாகச் சென்று உள்ளாடைகளை திருடும் மர்ம நபர்!

JananiGovindhan

நாளுக்கு நாள் நம்மை சுற்றி பல விசித்திரமான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதுவும் குற்றச் செயல்கள் குறிப்பாக விநோதமான திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக காணக் கிடைக்கின்றன.

பொதுவாக திருட்டு, கொள்ளையாக இருந்தால் அது பணத்துக்காகவோ, நகைக்காகவோ அல்லது விலையுயர்ந்த பொருட்களாகவோதான் இருக்கும். ஆனால் மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் நடந்த சம்பவம் பெண்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

அது என்னவெனில், குவாலியரின் கெளஸ்புரா பகுதியில் பெண்களின் உள்ளாடைகள் தொடர்ந்து காணாமல் போவது நடந்திருக்கிறது. கடந்த சில நாட்களாக உள்ளாடைகளை திருடும் சம்பவம் நடந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 3ம் தேதி அதேப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய குர்தா உடையில் இருந்த 500 ரூபாயும் உள்ளாடையும் காணாமல் போனதை அறிந்த அவர் அருகே இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்திருக்கிறார்.

அப்போது இளம் வயதில் இருக்கக் கூடிய நபர் ஒருவர் அந்த பெண்ணின் குடியிருப்பில் இருந்து உள்ளாடையுடன் வெளியேறுவதைக் கண்டு அதிர்ச்சியுற்று குவாலியர் போலீசிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

இந்த புகாரை அடுத்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிந்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கெளஸ்புரா பகுதி பெண்கள் பலரும் சைக்கோ கொலைகாரனாக இருக்குமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துப் போயிருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு காண்போரை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.