டிரெண்டிங்

விமானத்தில் புரப்போஸ்! நடுவானில் திடீரென தோன்றிய வருங்கால கணவரால் ஷாக் ஆன இளம்பெண்!

விமானத்தில் புரப்போஸ்! நடுவானில் திடீரென தோன்றிய வருங்கால கணவரால் ஷாக் ஆன இளம்பெண்!

JananiGovindhan

ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணியின் இருக்கையில் போதையில் இருந்த மற்றொரு பயணி சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் பரபரப்புக்கு வித்திட்டிருந்தது. இதற்கு ஏர் இந்தியா நிர்வாகம் தரப்பில் முதலில் பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சர்ச்சையும் ஆனது. அதன் பிறகு விமான போக்குவரத்து துறையின் ஆணையை அடுத்து தலைமறைவாக இருந்த அந்த ஷங்கர் மிஸ்ராவை கைது செய்திருந்தனர். இப்படியான கசப்பான அருவருப்பான சம்பவம் நடந்த நிலையில், தனது வருங்கால மனைவிக்கு சஸ்ப்ரைஸ் கொடுக்க திட்டமிட்டிருந்தவருக்கு ஏர் இந்தியா நிர்வாகம் உதவியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

அதன்படி, லண்டனில் இருந்து மும்பை வரும் தன்னுடைய வருங்கால மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக நண்பரின் மூலம் ஏர் இந்தியா ஊழியரை அணுகி விஷயத்தை சொல்ல அவர்களும் மற்ற பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்காத வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

கடந்த ஜனவரி 2ம் தேதி ஐதராபாத் வழியாக லண்டனில் இருந்து மும்பை வந்த அதே ஏர் இந்தியா விமானத்தில் ஐதராபாத் டூ மும்பை வர அந்த காதலர் டிக்கெட் புக் செய்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக கையில் பிங்ச் சார்ட் உடன் காதலி இருக்கும் இருக்கை அருகே வந்திருக்கிறார்.

சற்றும் எதிர்பாராத அந்த பெண் அதிர்ச்சியோடும், ஆச்சர்யத்தோடும் பார்த்து எழுந்து வர அப்போது மறைத்து வைத்திருந்த மோதிரத்தை நீட்டி தன்னுடைய காதலை அந்த நபர் வெளிப்படுத்த, திகைத்துப்போன அப்பெண் அவரை கட்டியணைத்து அன்பை பொழிந்திருக்கிறார்.

இந்த நெகிழ்ச்சியான நிகழ்வை கண்ட பிற பயணிகள் அனைவரும் அந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்திருக்கிறார்கள்.