டிரெண்டிங்

2 வாரத்துக்கு ஒரு முறைதான்.. 3 ஆண்டுகளுக்கு பின் காதலியின் சுயரூபத்தால் திடுக்கிட்ட காதலன்

JananiGovindhan

புதிதாக காதலில் விழும் போது அந்த நபரின் எந்த பழக்கவழக்கமும் பெரிதாக கண்ணுக்கு தெரியாது. தொடக்கத்தில் கோபமாக இருந்தால், அலட்சியப்படுத்துவது போல பேசினால், சண்டையிட்டால் அதனை காதலின் அடையாளமாகவே எடுத்துக்கொண்டு பின்னாளில் அதுதான் கொடுமையாக புலப்படும்.

இப்படி காதலிப்பவர்கள் காதலித்தால் மட்டும் போதாது என்ற வரையறையோடு இல்லாமல் இன்னபிற பழக்கவழக்கங்களையும் தெரிந்து வைத்துக்கொண்டால் போதும் பிரிவுக்கு ஏது வழி. ஆனால் உண்மையில் , தொடக்க காலத்தில் தெரியாத சில விஷயங்கள் நீண்ட நெடிய காதல் உறவுக்கு பிறகு தெரிய நேர்ந்தால் எப்படி இருக்கும்?

அப்படியான சம்பவம் குறித்து ரெடிட் தளத்தில் பயனர் ஒருவர் பகிர்ந்ததுதான் நெட்டிசன்களிடையே வைரலாகியிருக்கிறது. அதன்படி, 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், அந்த நபரின் காதலி இரண்டு வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே குளிப்பதை பழக்கமாக வைத்திருக்கிறார் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

இது தொடர்பான அவரது ரெடிட் பதிவில், “நான் அவளை காதலிக்கிறேன், ஆனால் நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. அவள் அடிக்கடி குளிப்பதில்லை. அதிகபட்சமாக வாரத்துக்கு ஒருமுறைதான் குளிக்கிறார்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், அந்த பெண்ணை நெருங்கும் போது அவர் மீது துர்நாற்றம் வீசுவதை வைத்தே இதனை அறிந்ததாகவும், ஆரம்பத்தில் இதனை கவனிக்கவில்லை. எப்போதாவது அவர் மீது கெட்ட நாற்றம் வரும். அது வழக்கமாக மனிதர்களுக்கு இருக்கக் கூடியது என பெரிதுபடுத்திக்கொள்ளவில்லை. ஆனால் இப்போதுதான் புரிகிறது. என்னை பார்க்க வரும் போது மட்டும்தான் அவர் குளித்துவிட்டு வருவார் என நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார். “இந்த நிலையை எப்படி கையாள்வது என தெரியவில்லை. இது குறித்து காதலியிடமும் பேசிவிட்டேன்.

ஆனால் அதுவும் சரிவரவில்லை. இதனால் அவர் மனமுடைந்து போனதோடு எங்கள் இருவருக்கும் இடையே மனக்கசப்பே ஏற்பட்டுவிட்டது” என்றும் தெரிவித்துள்ளார். 

இந்த பதிவை கண்ட பிற ரெடிட் பயனர்கள், “அந்த பெண்ணுக்கு சுகாதாரமாக இருக்கக் கூடிய பிரச்னை இருக்கிறது” என்றும், “நான் ஒரு நாளைக்கு இருமுறை குளிக்கிறேன், இந்த அளவுக்கு அந்த பெண் சுகாதாரமில்லாமல் இருப்பாரா என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை” என்றும், “இரண்டு வாரம் குளிக்காமல் இருப்பதெல்லாம் மிகவும் நீளமானது” என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.