டிரெண்டிங்

சவக்குழியில் ஜனநாயகம் - மம்தா தாக்கு

சவக்குழியில் ஜனநாயகம் - மம்தா தாக்கு

webteam

‛ஜி.எஸ்.டி-யை அமல்படுத்தி நாட்டின் ஜனநாயகம், சுதந்திரத்தை உள்ளிட்டவைகளை மத்திய அரசு சவக்குழிக்குள் தள்ளுகிறது என மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலுமுள்ள ஜி.எஸ்.டி.,யின் மூலம் சிறு வர்த்தகர்களை மத்திய அரசு துன்புறுத்துகிறது என்று மம்தா குற்றஞ்சாட்டியுள்ளார். 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14 நள்ளிரவில் நமக்கு சுதந்திரம் கிடைத்தது என்று கூறிய அவர், அதே சுதந்திரமும் ஜனநாயகமும் 2017, ஜூன் 30ம் தேதி நள்ளிரவில் சவக்குழிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மத்தியில் கேலிக்கூத்தான ஆட்சி நடக்கிறது என்று விமர்சித்துள்ள மம்தா, ஜி.எஸ்.டி. சட்டத்தில் வர்த்தகர்களுக்கு எதிராக மோசமான கட்டுப்பாடுகள் உள்ளதால் வியாபாரிகள் கடும் அச்சத்தில் உள்ளதாகவும் கூறினார்.