டிரெண்டிங்

“என்னை சிலர் தாக்கிவிட்டார்கள்” - மேற்கு வங்க முதல்வர் மம்தா பரபரப்பு புகார்

“என்னை சிலர் தாக்கிவிட்டார்கள்” - மேற்கு வங்க முதல்வர் மம்தா பரபரப்பு புகார்

Sinekadhara

யாரோ சிலர் தன்னை தாக்கிவிட்டதாக மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி புகார் எழுப்பியுள்ளார்.

இன்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேட்புமனுவை தாக்கல் செய்தபிறகு, பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அதன்பிறகு அந்தப் பகுதியில் இருந்த கோயில் ஒன்றில் வழிபாடு நடத்திவிட்டு அவர் வெளியே வரும்போது நான்கு ஐந்து நபர்கள் அவரை தள்ளியதாகவும், தாக்க முற்பட்டதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

காரை நோக்கி செல்லும்போது சிலர் தன்னை தள்ளிவிட்டதால் காலில் காயம் ஏற்பட்டதாக மம்தாவும் புகார் கூறியிருக்கிறார். இதனால் மம்தாவின் காலில் அடிப்பட்டிருப்பதாகவும், முகத்தில் சிராய்ப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அவரால் நடக்கமுடியவில்லை என்றும், அவரைத் தூக்கிவந்து வாகனத்தில் வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்த வீடியோக்களும் வெளியாகியுள்ளன.

ஆனால் ஒரு முதலமைச்சரை எவ்வாறு தாக்கமுடியும்? பரப்புரையில் ஈடுபட்டிருக்கும்போது போலீஸார் எப்படி இல்லாமல் போனார்கள்? என்பது போன்ற கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. இதனால் இது எதிர்கட்சிகளின் செயலா? அல்லது உள்கட்சியினராலேயே நடந்ததா என்பது போன்ற விசாரணைகளில் போலீஸார் ஈடுபட்டுவருகின்றனர்.