டிரெண்டிங்

கருணாநிதியை ஆர்வத்துடன் கேட்டார் மலேசிய பிரதமர்: மு.க.ஸ்டாலின்

கருணாநிதியை ஆர்வத்துடன் கேட்டார் மலேசிய பிரதமர்: மு.க.ஸ்டாலின்

webteam

மலேசியா சென்றுள்ள திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அந்நாட்டு பிரதமர் நஜீப் ரஜாக்கை நேரில் சந்தித்துப் பேசினார். 

மலேசியாவில் அந்நாட்டு பிரதமரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மலேசியாவின் முன்னேற்றத்தில் மலேசிய வாழ் தமிழர்கள் பெரும் பங்காற்றி வருவது பெருமைக்குரியதாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் மலேசிய பிரதமர் கருணாநிதியை பற்றியும் தமிழக மக்கள் பற்றியும் மிகவும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார். மு.க ஸ்டாலின், மலேசிய பிரதமர் இடையே நடைபெற்ற சந்திப்பு மரியாதை நிமித்தமானது என திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.