டிரெண்டிங்

கேரள முதல்வரை நலம் விசாரித்த கமல்ஹாசன்

கேரள முதல்வரை நலம் விசாரித்த கமல்ஹாசன்

rajakannan

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நலம் விசாரித்தார்.

முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். பினராயி விஜயன் வருடாந்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையின் உயர்சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட கேரள முதல்வருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனையடுத்து, முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று மதியம் மருத்துவமனையில் இருந்து கேரள விருந்தினர் மாளிகைக்கு திரும்பி உள்ளார். 

இந்நிலையில், விருந்தினர் மாளிகையில் இருந்த பினராயி விஜயனை கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்தச் சந்திப்பின் போது, பினராயி விஜயன் மனைவி கமலாவும் உடன் இருந்தார்.

முன்னதாக, தனது அரசியல் பிரவேசத்திற்கு முன்பாக கமல்ஹாசன் கேரளா சென்று பினராயி விஜயனை சந்தித்து இருந்தார். அதேபோல், கமல் கட்சி அறிவிப்பு வெளியிட்ட மதுரை மாநாட்டில் வீடியோ மூலம் அவருக்கு பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்தார்.